Saturday 14 November 2015

தமிழ் காப்போம்

தமிழ் மொழியை காக்க சிறுவர்கள் நடத்திய தமிழன்னை ஊர்வலம்! http://dhunt.in/Hbo2

Friday 6 November 2015

தமிழகத்தை ஆட வைக்கும் டாஸ்மாக்

நான் ஏன் அப்படி செய்தேன் தெரியுமா...? ஸ்டாலினுக்கு மது பாட்டில் கொடுத்த மாணவியின் சோகக்கதை http://dhunt.in/GakD

Tuesday 13 October 2015

உறவுகள்

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு
----------------------------------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

Plz share to all.

Monday 12 October 2015

விமர்சனத்துக்கு விளக்கம்.

💥 அரசிடமிருந்து விலையில்லா  மிக்சி, கிரைண்டர்  மற்றும்  தொலைக்காட்சி  முதலான  பொருட்கள் வாங்கிய  அனைவரும்  ஏன்  தங்கள்  குழந்தைகளை  அரசுப் பள்ளியில்  சேர்ப்பதில்லை?

💥 அரசு ஒப்பந்ததாரர்கள்  அனைவரும்  ஏன்  அரசுப்பள்ளியில்  தங்களது குழந்தைகளை  சேர்ப்பதில்லை?

💥 விவசாய கடன் தள்ளுபடி பெற்ற  அனைவரும்  தங்களது  குழந்தைகளை  அரசுப் பள்ளியில்  சேர்கிறார்களா?

💥 அரசு  உயர் அதிகாரிகள்  மருத்துவர்கள், பொறியாளர்கள்  அனைவரும்  ஏன்  தங்கள்  குழந்தைகளை  அரசுப் பள்ளியில்  சேர்ப்பதில்லை?

💥 ஐன்ஸ்டீனுக்கு  அடுத்தபடியாக  அறிவும், அனுபவமும், ஆற்றலும் பெற்ற  அறிவு  ஜீவிகளே!
என் மேற்சொன்ன வேண்டுகோள்களுக்கு  இரண்டே  தீர்வுகள்தான் இருக்கமுடியும்.

1⃣ அரசிடம்  கோரிக்கை வைத்து  எல்லா  பள்ளிகளையும்  அரசுடைமை  ஆக்கலாம்.
2⃣ ஜனநாயக  நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், நுகர்வோர்களுக்குமான பொதுவான உரிமை உள்ளது  என கருதலாம்.

💥 ஆனால்...
மீண்டும்  வன்மமான பார்வையில் அரசு பள்ளி  ஆசிரியர்களை  விமர்சிப்பது, மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதைப்போன்றது.

💥 காந்தி ஆடைகளை  அளவாக அணிந்தபோது,
ஏன் நேரு கோட் அணிந்தார்? என்று  கேட்பதைப்போல  உள்ளது.

💥 ரேஷன்அரிசி இருக்கும்போது பொன்னிஅரிசி உண்ணலாமா? என்று  கேட்பதைப்போல  உள்ளது.

💥  அரசு மருத்தவமனைகள் ஆயிரம் இருக்கும்போது,
ஏன் வசதிபடைத்தவர்கள்  அப்பல்லோவை நாடவேண்டும்?  என்பதைப்போல் உள்ளது.

💥 எனவே...
இனி விவாதங்களின்போது அறிவு ஜீவிகளே.!
அறிந்து பேசுங்கள்.!!
அளந்து பேசுங்கள்.!!!

🙏🏼அன்புடன் ஆசிரியர்கள்🙏🏼
〰🔅🔅🔅🔅🔅🔅🔅〰

Thursday 1 October 2015

ரோபோ

ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை! http://nhunt.in/qEnx

Wednesday 30 September 2015

கறை காணாத கக்கன்.

காமராஜர் கவுரவித்து கொண்டாடிய கறைபடியாத கக்கன் என்னும் ஒரு மாணிக்கம்.! அவர் நேர்மை பற்றி தெரியுமா.?
காலம் முற்றாக மறந்துவிட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.
சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது.
காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது.காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார்.
சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.
காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன்.
1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.
இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.(ஏற்க விட்டதில்லை)
சோதனைகளை தாண்டி ஜொலித்த கறைபடியாத தங்கம்.!
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார்.
முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.
உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.
மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.
தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
இன்றைய விலையில் அந்த இடம் கோடிகள் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. அவருக்குத் தனியாக ஒரு சமாதி வைக்கவில்லை நாம். ‘இன்று கக்கனை யார் நினைக்கிறார்கள்? பத்தரை மாற்றுத் தங்கம்  புடம்போட்ட கக்கனை விட உயர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை எவருமில்லை. இனியும் பிறக்கப் போவதும் இல்லை.